• Latest News

    September 16, 2013

    நாய்களுடன் தூங்கினால் ஈக்களுடன் எழும்ப வேண்டிவரும் என்பது எனக்குத் தெரியும்; சரத் பொன்சேகா

    என் மனைவியையும் என்னையும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாக ஐதேக சொன்னது. போர்த்துக்கேயர், ஒல்லாந்த கலப்புள்ள அரசியலை விரும்பாததனால் வேண்டாம் என்றேன். நாய்களுடன் தூங்கினால் ஈக்களுடன் எழும்ப வேண்டிவரும் என்பது எனக்குத் தெரியும். வெற்றிலை காய்ந்துள்ளது. யானை கேலிச் சித்திரங்களில் மட்டும் நிற்கிறது. அதுவும் காயத்திற்கு மருந்து கட்டிய யானை. ஆட்சியாளர்களின் நடத்தையைப் பாருங்கள். தீமைகளிலிருந்து நாட்டைக் காப்பது அவசியமாகும்' இவ்வாறு உக்குவளை நகரில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றின் போது ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டார்.
    அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
    'ஆட்சியாளர்கள் தேர்தலுக்குள் மறைந்துகொண்டு கொள்ளையடிக்கிறார்கள். இந்நாட்டில் மிகவும் மோசமானதொரு அரசியலே காணப்படுகிறது. ஆட்சியாளர்களின் 'தடியர்கள்' ஜனநாயகக் கட்சி ஒரு மேடையை அமைப்பதற்கும் இடமளிப்பதில்லை. தீய மனோநிலையில் ஆட்சியாளர்கள் கருமங்கள் ஆற்றுகிறார்கள். பெரும்பான்மை தலைவர்கள் பெண்களை நாசம் செய்பவர்கள். சிறுவர் பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள். இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழியும் வரை நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

    'மூன்று வேளை சாப்பிடாமல் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்நாட்டில் இருக்கின்றனர். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இருப்பதெல்லாம் எதிர்பார்ப்புக்கள் அழிந்துபோன முகங்கள்... நூற்றுக்கு 05 வீதமானவர்கள் மட்டுமே சிறப்பாக வாழ்கிறார்கள். திரைப்படம் ஒன்றைப் பார்த்தால் அடுத்தவாரம் சாப்பிடுவது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. நிகழ்கால ஆட்சியில் நாங்கள் கதியற்றவர்களாக இருக்கிறோம். நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் தமக்கு ஏற்றாற்போல வேலை செய்கிறார்கள். நாடு அதளபாதாளத்தை நோக்கிச் செல்கிறது. பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். அரசியலாளர்கள் அனைத்தையும் அபகரித்து முடிந்தாயிற்று'
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாய்களுடன் தூங்கினால் ஈக்களுடன் எழும்ப வேண்டிவரும் என்பது எனக்குத் தெரியும்; சரத் பொன்சேகா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top