• Latest News

    September 16, 2013

    பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம்

    நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

    பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தின் பிரதிநிதியாக இலங்கை வரும் சார்ள்ஸ்இ மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

    இதற்கமைவாக பிரித்தானிய இளவரசரின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பில் ஆராயும் விசேட மாநாடொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

    இந்த மாநாட்டில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கின் தலைமையிலான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

    இந்த குழுவினர் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல்இ காத்தான்குடி ஆதார வைத்தியசாலைஇ கல்லடி திருச்செந்தூர் இந்து ஆலயம் மற்றும் நாவற்குடா விசேட தேவையுடையோர் பாடசாலை ஆகியவற்றுக்கு சென்று நிருவாகிகளுடன் கலந்துரையாடினர்.

    இதன்போது பிரித்தானிய இளவரசரின் விஜயம் குறித்தும் கலந்துரையாடினர்.

    அத்துடன் மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காந்தியின் உருவச் சிலை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றம்இமட்டு நகரில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் என்பவற்றையும் இந்த குழுவினர் பார்வையிட்டனர்.
    இதில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் செயலாளர் சரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top