கண்டி காவற் துறையி னரிடம் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு பொருத்தமான
மணமகள் உள்ளதாக ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கிண்டல் தொனியில்
கூறியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஐநா மனித உரிமை ஆணையாளர்
நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இலங்கை மக்கள்
தொடர்புத்துறை அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா கூறியிருந்தார்.
அவரது இந்த அநாகரீகமான பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள்
எழுந்தன. ராஜதந்திர மட்டத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்திய மேர்வினின் இந்த
நான்காம் தர கூற்றுக்காக, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் சிறிபால
டி சில்வா, நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, மேர்வினுக்கு பொருத்தமான மணமகள் கண்டி காவற்துறையினரின் வசம் உள்ளதாகக் கூறியுள்ளார். மேர்வின் அங்கு சென்று தமது திருமண ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில், காவற்துறையினர் அண்மையில் மோப்ப நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
(நன்றி ரி.டபிள்யூ.ரி)
0 comments:
Post a Comment