பிணத்துக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவ சிகிச்சைகள் நடைபெறுவது சகஜமாகி விட்டது, அதன் அடிப்படையில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார்.
இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு பிணத்துக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வைத்தியர் செர்ஜியோ கனாவெரோ தலைமையிலான குழுவினர் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
சுமார் 18 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போது புது விதமான தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டது. தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தலையுடன் பொருத்தப்பட்டது.
இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சைநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment