பி.எம்.எம்.ஏ.காதர்;
கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும்; இன்று (27-09-2014) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான்; தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களும், சிறப்பு அதிதியாக தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியல் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர அவர்களும், விஷேட அதிதியாக மகநெகும தலைவரும், சிரேஸ்ட
சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்க அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டபள்யூ,டி.வீரசிங்க அவர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் கல்முனை மாநகரப் பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியல் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர ஆகியோரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் அதிதிகளிடம் கோரிக்கைக் கடிதங்களையும் கையளித்தனர்.
0 comments:
Post a Comment