பள்ளிவாசல்கள் உடைப்பது
ஜனாதிபதிக்கு சிறிய பிரச்சினையாம். வரலாற்றில் எந்தவொரு அரச
தலைவரும் மேற்கொள்ளாத இனவாதத்தையே ஜனாதிபதி முன்னெடுக்கின்றார்.
ஆகவே அனைத்து முஸ்லிம் மக்களும் அரசாங்கத்தை தெரிந்து வாக்களிக்க
வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான
வன்முறைகள் திட்டமிட்டே முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு அரச
அனுசரணை உள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு
மாநாட்டில் அனைத்து நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னிலையில்
பாதுகாப்புச் செயலாளர் இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் உள்ளதாக
குற்றம் சுமத்தினார். இது பாரதூரமான கருத்தாகும்.
இஸ்ரேல் இதற்குப் பின்னணியில் உள்ளதா
என்றும் எண்ணத் தோன்றுகின்றது. பலஸ்தீனத்தில் முஸ்லிம்களை கொலை
செய்யும் இஸ்ரேலுடன் இலங்கை அரசு தற்போது நெருங்கிய தொடர்புகளை
மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படவுள்ளது. ஆகவே
முஸ்லிம்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை
ஆதரித்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக்
கூறினார்.-வீரகேசரி
0 comments:
Post a Comment