• Latest News

    September 18, 2013

    போராளிகளின் பிடியில் இருந்த மக்களை பிலிப்பைன்ஸ் இராணுவம் மீட்டது

    பிலிப்பைன்சில் மோரோ தேசிய விடுதலை முன்னணி என்ற முஸ்லிம் போராளிகள் அமைப்பு அந்நாட்டை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி போராடி வருகிறது. இந்நிலையில் அரசு ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லை என்று கூறி கடந்த மாதம் பிலிப்பைன்சின் தென்பகுதியினை சுதந்திர முஸ்லிம் நாடாக அறிவித்தனர்.

    அதன்பிறகு கடந்த 9-ம் தேதி தென் பகுதியில் உள்ள ஜாம்போங்கோ பகுதியின் சில கிராமங்களை அவர்கள்  சுற்றிவளைத்து பொதுமக்கள் சிலரை சிறைபிடித்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு படையினர் 1000 பேர் குவிக்கப்பட்டனர்.

    அவர்களிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் இருதரப்பிற்கும் இடையே சண்டை நடந்து வந்தது. இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டனர். அப்போது 80 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

    நேற்று நடந்த வான்வழி தாக்குதலில் போராளிகளின் பிடியில் இருந்து பொதுமக்கள் 140 பேரை ராணுவம் மீட்டது. அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 70 சதவிகித பகுதிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். ஆனால் எவ்வளவு பேரை கேடமாயக அவர்கள் படுத்தினர் என்கிற விவரம் தெரியவில்லை. இன்னும் சில பகுதிகளில் சண்டை நடக்கிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: போராளிகளின் பிடியில் இருந்த மக்களை பிலிப்பைன்ஸ் இராணுவம் மீட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top