• Latest News

    September 16, 2013

    முஸ்லிம் பிரதிநிதிகள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முன் வர வேண்டும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்

    (யு.கே.காலித்தீன்)
    மறைவரும் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கான பயணத்தில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்து அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரால் அரசியல் முகவரிகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் அனையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்தியுள்ளார்.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜெமீல் இதனைத் தெரிவித்துள்ளார்.
    அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
    மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மிகவும் இக்கட்டான் ஒரு சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கி இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கென ஒரு அடையாளத்தையும் முகவரியையும் பெற்றுக் கொடுத்தது மட்டுமலாமல் இந்த சமூகத்தை நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் மாற்றியமைத்தார்.
    அதன் மூலம் ஆட்சியின் பங்காளிக் கட்சியாகத் திகழ்ந்து அரசியல் அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு சமூகத்திற்குத் தேவையான பல்வேறு வேலைத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்தார்.
    விசேடமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பதிவாக இருந்து கொண்டிருக்கிறது.
    மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாம் தற்போது மேற்கொண்டு வருகின்ற தேர்தல் பிரசாரங்களின் போது அம்மக்கள் எம்மிடம் அதனை நன்றியுடன் ஞாபகப்படுத்தி கூறுகின்றனர். இன்று நாம் ஓரளவு நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் அது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் செய்த சேவையின் பயனாகவே என்று அவர்கள் கூறுகின்ற போது- அது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகின்றது.   
    அவர் இன்று எம்மத்தியில் உயிருடன் இருந்திருப்பாரானால் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது மிகவும் இலகுவாக வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
    அதேவேளை மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் அரசியலுக்கு வந்து அமைச்சர்களாகவும், எம்.பி.க்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாகவும் மற்றும் உறுப்பினர்களாகவும் வேறு பல அரசியல் உயர் பதவி வகிக்கின்ற முக்கியஸ்தர்களாகவும் இருக்கின்ற பலர் அந்த மாபெரும் தலைவரை மறந்திருப்பதானது எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது.
    எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அவரது நினைவு தினத்தன்று தேசிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் துஆப் பிரார்த்தனைகளையும் விசேட நிகழ்வுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றது. இம்முறை தேசிய நிகழ்வை புத்தளத்தில் நடத்துகின்றது.
    ஆனால் ஏனைய கட்சிகளிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்  அவரது நினைவு தினத்தை கணக்கில் எடுக்காமல் புறக்கணித்து வருவதானது அவருக்கும் இந்த சமூகத்திற்கும் செய்யும் மாபெரும் துரோகம் என்றால் அது மிகையாகாது.
     ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரை முகத்தில் புகழ்ந்து துதிபாடுவதை விட அவர் மரணித்த பின்னர் அவரது சேவைகளை நினைவு கூர்வதும் இளைய தலைமுறையினருக்கு அவரது சேவைகளை  எடுத்துச் சொல்வதும் அவருக்காக துஆப் பிரார்த்தனை செய்வதுமே மனிதமும் தர்மமுமாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
    ஆகையினால் நம் எல்லோருக்கும் பெரும் தலைவரான மர்ஹூம் அஷ்ரப் அவர்களை இத்தருணத்தில் நினைவு கூர்வதுடன் மட்டுமலாமல் அவர் காட்டிய வழியில் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காகவும் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காகவும் இன்றைய பேரினவாத நெருக்கடி மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டு பலமான சக்தியாக கூட்டிணைந்து செயற்படுவதற்கும் முன்வருமாறு அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும்  அறைகூவல் விடுக்கின்றேன்" என்று அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் பிரதிநிதிகள் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முன் வர வேண்டும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top