முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை பிணை வழங்கி விடுதலை
செய்யுமாறு மஹர நீதவான் தர்ஷிகா விமலசிறி இன்று உத்தரவு பிறப்பித்தார்.
எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொண்டுள்ளதாக வாஸ் குணவர்தன மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் சந்தேக
நபருக்கு பிணை வழங்குவது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
எனினும், சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ்
குணவர்தனவிற்கு தலா 5 லட்சம் ரூபா வீதம் இரு சரீரப் பிணை வழங்கி விடுதலை
செய்த மஹர நீதவான் அவருக்கு நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு செல்வதற்கான தடை
உத்தரவையும் பிறப்பித்தார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இன்றைய தினம் அவ்வாறு பிணை
தீர்ப்பு அளிக்கப்பட்டபோதிலும், கோடீஸ்வர வர்த்தகர் முஹம்மட் சியாமின் கொலை
சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதனால்
தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment