• Latest News

    September 02, 2013

    வாஸுக்கு பிணை மறுக்கப்பட்டது

    vass 410px 01-08-13முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கப்பம் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
    களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரிடம் வாஸ் குணவர்தன 30 லட்சம் ரூபா கப்பம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று மஹர நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
    அத்துடன் சந்தேக நபர் வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்குமாறு அவர் தரப்பில் ஆரஜான சட்டத்தரணி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் குறித்த வழக்கை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாஸுக்கு பிணை மறுக்கப்பட்டது Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top