• Latest News

    September 02, 2013

    ஜனாதிபதியால் அசெளகரியப்பட்டார் அமைச்சர் கெஹேலிய!

    அரச வங்கிகளை விற்பதாக நாட்டிற்குள் பொய் வதந்திகள் பரவி வருவதாக ஜனாதிபதி அம்பாறை, ஒலுவில் துறைமுக திறப்பு வைபவத்தில் நேற்று (01) உரையாற்றியதன் மூலம் ஊடகத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
    அரச சொத்துக்கள் விற்கப்பட்டு வரும் இந்த காலக்கட்டத்தில் அரச சொத்துகளை மீண்டும் அரசுக்கே மீளப் பெற்றுக்கொள்ளும் ஒரு காலக் கட்டமே தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்
    என்றபோதிலும் மக்கள் வங்கியின் பங்குகள் கொழும்பு பங்குச் சந்தையில் விற்பதற்காக அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தது கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைகள் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஆகும்.
    நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கடந்த 15ஆம் திகதி பெப்ரவரி மாதம் கூடிய அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியால் அசெளகரியப்பட்டார் அமைச்சர் கெஹேலிய! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top