• Latest News

    September 18, 2013

    மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள்

    ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில்,  நாடுகள் தொடர்பான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, இலங்கை  நிலவரம் குறித்து அமெரிக்காவும் ஜேர்மனியும் கவலை வெளியிட்டதுடன், இலங்கை   நிலைமை குறித்து கலந்துரையாடுவதில் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.
    ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அறிக்கையாளர்கள், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கான நாள் மற்றும் ஒழுங்குகள் குறித்து இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்கப் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

    “மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள். அமைதியான மக்கள் போராட்டத்தை இராணுவ பலத்தின் மூலம் அடக்குதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீறப்படுவது, மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு எதிரான மீறல்கள், சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாம் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்.” என்றும் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top