• Latest News

    September 12, 2013

    கெமிக்கல் தாக்குதலுக்கு ஜனாதிபதி அசாத் உத்தரவிடவில்லை” -ஜெர்மன் உளவுத்துறை

    சிரியாவில் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் கெமிக்கல் ஆயுத தாக்குதலுக்கு, சிரியா ஜனாதிபதி அசாத் உத்தரவிடவில்லை” என்று ஜெர்மன் உளவுத்துறையை மேற்கோள் காட்டி ஜெர்மன் பத்திரிகை Bild am Sonntag, நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  செய்தி வெளியிட்டுள்ளது. Bild am Sonntag என்பதன் அர்த்தம், Picture on Sunday.
    ஜெர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறை BND உயரதிகாரி ஒருவர் கூறியதாக வெளியாகியுள்ளது இந்த தகவல்.சிரியாவுக்கு அருகேயுள்ள கடல் பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஜெர்மன் கடற்படையின் கப்பலான ‘ஒகெர்’, சிரியா உயர்மட்ட தகவல் தொடர்புகளை ஒட்டுக்கேட்ட வகையில் இந்த தகவல் பெறப்பட்டதாகவும், அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

    இந்த செய்தி வெளியானதை அடுத்து, ஜெர்மன் உளவுத்துறையை தொடர்புகொண்ட சர்வதேச மீடியாக்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், உளவுத்துறை தகவல் தொடர்பாளர்.
    “சிரியா ராணுவ தலைமை கெமிக்கல் ஆயுதங்களை போராளி அமைப்பினர்மீது உபயோகிக்க கடந்த 4 மாத காலமாக அனுமதி கேட்டபடி இருந்தது. ஆனால், சிரியா ஜனாதிபதியின் அனுமதி அவர்களுக்கு இறுதிவரை கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ள ஜெர்மன் பத்திரிகை, “சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், ஜனாதிபதி அசாத்தை பதவியில் இருந்து அகற்ற முடியாது” என உளவுத்துறை தெரிவித்துள்ளதாகவும் எழுதியுள்ளது.
    சிரியா மீது மேலை நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுப்பது என்ற திட்டத்தை, ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இன்னமும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள் அவர்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கெமிக்கல் தாக்குதலுக்கு ஜனாதிபதி அசாத் உத்தரவிடவில்லை” -ஜெர்மன் உளவுத்துறை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top