• Latest News

    September 12, 2013

    வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க அனுமதியோம் : ஒமல்பே சோபித தேரர்

    வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க இடமளியோம். அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதோடு மாத்திரமின்றி சம்பந்தன் குழுவினர் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வதுடன் பாராளுமன்றத்திலும் நடவடிக்கை எடுப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.அப்பாவி தமிழ் இளைஞர்களை தூண்டி விட்டு மீண்டும் பலிக்கடாவாக்கும் செயற்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரத்தவெறி கொண்டு அலைகின்றது. 
    சிங்கள மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கூட்டமைப்பிற்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம். தனி நாடுஇ சுயநிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி என்பவையெல்லாம் மூட்டை கட்டப்படாவிடின் கூட்டமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று அக்கட்சி தலைவர் ஒமல்பே சோபித தேரர் எச்சரித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்க அனுமதியோம் : ஒமல்பே சோபித தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top