நாம் தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்து
செயற்படுகின்றோம். இலங்கையில் முஸ்லிம்கள் மீது சிறு காயத்தைக் கூட நாம்
விளைவிக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. அரபு
நாடுகள் எமது பெளத்த அமைப்பிற்கும் இலங்கையின் பெளத்த மக்களுக்கும்
கறுப்புச் சாயம் பூசி கிழக்கினை அரபிய நாடாக மாற்ற நினைக்கின்றன.
பொதுபல சேனாவினால் நேற்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பினர்
மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளது
சர்வதேச தீவிரவாதிகளும் இலங்கையில் உள்ள
தீவிரவாத அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து கிழக்கு வாழ் முஸ்லிம்களை மட்டு
மன்றி ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக மாற்றி நாட்டை சீரழிக்க
நினைக்கின்றனர்.
இலங்கையில் பெளத்த மதமும், பெளத்த மதக்
கொள்கைகளும் அழிந்துகொண்டே செல்கின்றன. அன்று எமது பெளத்த மதத்தைக்
காப்பாற்றிய தர்மபாலவைப் போன்று இன்றும் லட்சக்கணக்கான தர்மபாலாவை உருவாக்க
வேண்டும் எமது கொள்கைகளுக்காகவும் பெளத்தர்கள் வாழ வேண்டும்.
எனவே எதிர்காலத்தில் அனைத்து பெளத்த
அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அநகாரிக தர்மபாலவின் கொள்கையுடைய பெளத்தர்களை
உருவாக்கி நாட்டில் உள்ள தீவிரவாதத்தினை அழித்துக்காட்டுவோம் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment