அவுஸ்ரேலியாவுக்கு படகில் அகதிகளை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐவர் நேற்று மாத்தறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய சமஸ்டி காவல்துறையின் மூத்த ஆலோசகர் கிறிஸ்ரோபர் வூட் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தேஇ மாத்தறை காவல்துறையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். கொமாண்டர் பதவி வகிப்பவர் என்றும் திருகோணமலை கடற்படைத் தளத்தில் பணியாற்றுபவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படை அதிகாரியை விசாரணைக்காக அழைத்த மாத்தறை சிறப்புக் காவல்துறையினர். அவரைக் கைது செய்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை அனுப்புவதில் தொடர்புபட்டிருந்த 3 சிறிலங்கா கடற்படையினர் உள்ளிட்ட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பணியாற்றும் அதிகாரி கைது செய்யப்பட்டதை சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment