தம்புள்ளையில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபதொன்றில் மூன்று பேர்
உயிரிழந்துள்ளதாக காவற்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தம்புள்ளை –
பக்கமுன வீதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பக்கமுனவில் இருந்து கண்டலம நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேர் சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் கண்டலம வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இளம் பெண்ணொருவர்
உட்பட் மூன்று பேர் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment