வடக்கில் தற்போது சிவில் நிர்வாகம் இல்லை. அனைத்தும்
இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. இது இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்
என ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத்
தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது தெற்கு சிங்கள
இனவாதிகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது
என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜித ஹேரத் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இராணுவத்தினரை முழுமையாக முகாம்களுக்குள் முடக்க
முடியாது. ஆனால், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு
அதிகரித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவம் ஆளும் தரப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக
முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின்
கவனத்திற்கு முன் வைப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினை வாதத்தை
ஊக்குவிப்பதாக உள்ளது. இதனை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
இவ் விஞ்ஞாபனத்தின் மூலம் கூட்டமைப்பு அரசில் உள்ள சிங்கள
இனவாதிகளுக்கு சாதகமான களத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. இதன்
மூலம் நாட்டுக்குள் மீண்டும் இனவாதம் தலைதூக்கும் ஆபத்து
தலைதூக்கியுள்ளது.

0 comments:
Post a Comment