• Latest News

    September 28, 2013

    புத்தளம் வாக்கெண்ணும் நிலையத்தில் மோசடிகள் இடம்பெறவில்லை; விசாரணையாளர்கள்

    புத்தளம் சென். அன்×ஸ் மத்திய கல்லூரியிலிருந்த  வாக்கெண்ணும் நிலையத்தில் புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் கைவிடப்பட்டிருந்தமை தொடர்பில் மேலும் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    இந்த வாக்கெண்ணும் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு  அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கம்பஹா உதவி சமுர்த்தி ஆணையாளர் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் அங்கு  எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இதேவேளைஇ இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தளம் உதவி தேர்தல்கள் ஆணையாளர் கொழும்பு தேர்தல்கள் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புத்தளம் மாவட்டத்திற்கான புதிய உதவித் தேர்தல்கள் ஆணையாளராக தேர்தல்கள் செயலகத்தின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சமந்த ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேவேளைஇ இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
    இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அமைச்சிடம் முறையிட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
    இதனுடன் தொடர்புடைய வழக்கு புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    புத்தளம் சென். அன்×ஸ் மத்திய கல்லூரியிலிருந்த  வாக்கெண்ணும் நிலையத்தில் புள்ளடியிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் கைவிடப்பட்டிருந்தமை தொடர்பில் மேலும் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    இந்த வாக்கெண்ணும் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு  அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கம்பஹா உதவி சமுர்த்தி ஆணையாளர் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
    இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் அங்கு  எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    இதேவேளை, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தளம் உதவி தேர்தல்கள் ஆணையாளர் கொழும்பு தேர்தல்கள் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    புத்தளம் மாவட்டத்திற்கான புதிய உதவித் தேர்தல்கள் ஆணையாளராக தேர்தல்கள் செயலகத்தின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சமந்த ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
    இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
    இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் அமைச்சிடம் முறையிட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
    இதனுடன் தொடர்புடைய வழக்கு புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    - See more at: http://www.thinakkural.lk/article.php?local/nibdjyutnf25098db92642286960cloavdc48fbf47535e888c02ae01vmcm#sthash.OGggPhdM.dpuf
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்தளம் வாக்கெண்ணும் நிலையத்தில் மோசடிகள் இடம்பெறவில்லை; விசாரணையாளர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top