• Latest News

    September 06, 2013

    முப்படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பேராசிரியர் சங்க சம்மேளனம் தெரிவிப்பு


    FUTA logo 410pxசில தினங்களுக்கு முன்னர் முப்படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் தமிழ் ஈழம் சர்வதே அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றுக்கு பங்கேற்றதாக பகிரங்கமாக கூறியதை வன்மையாக கண்டிப்பதாக பேராசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. குறித்த பேராசிரியர்கள் நாடு திரும்புககையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரகசிய பொலிஸாரால் விசாரணை செய்யப்படுவது சிக்கலுக்குரிய விடயமாகும் எனவும் பேராசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டது 2013 தமிழ் கல்வி தொடர்பான உலக ஆய்வு மாநாட்டிற்கே தவிரஇ இந்த மாநாட்டின் தலைவராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சம்மேளனத்தின் பேராசிரியர் ஏ. சண்முகதாஸ் எனவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் சங்க சம்மேளனம்இ இந்த சர்வதேச மாநாடானது இரகசியமாக நடத்தப்படும் ஒன்றல்ல எனவும் தெரிவித்துள்ளது.

    இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் பேராசிரியர் சங்க சம்மேளனம்இ முப்படைகளின் பிரதானிக்கு கல்வி தொடர்பான மாநாடுகளின் தன்மை மற்றும் அதன் உட்பொருள் தொடர்பாக நியாயம் தீர்க்க அதிகாரம் இல்லையென சர்வதேச பல்கலைக்கழக சேவைகளினால் 1988இல் கல்விச் சுதந்திரம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பான லீமா அறிக்கையை முப்படைகளின் பிரதானியின் கருத்தின் ஊடாக மீறப்பட்டுள்ளதாக பேராசிரியர்களின் சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முப்படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பேராசிரியர் சங்க சம்மேளனம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top