
என்றாலும் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் குறறப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (TID) மற்றும் விசேட அதிரடிப் படைப் பிரிவு (STF) ஆகியன புதிய அமைச்சான நீதி மற்றும் ஒழுங்கமைப்பு அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதி மற்றும் ஒழுங்கமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ருவன் சந்தனவிடம் கேட்டபோது அரச புலனாய்வுச் சேவையானது பிரிம்பான ஒரு செயற்திட்டம் என்பதன் காரணமாக அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமையும்.
இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தனவிடம் கேட்டபோது அரச புலனாய்வுச் சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் எனவும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் பொலிஸ் திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.
2013 ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி 1823/70ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீதி மற்றும் ஒழுங்கமைப்பு தொடர்பான புதிய அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்டதுடன்இ அந்த அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களில் ஒன்றான பொலிஸ் திணைக்களம் கொண்டுவரப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment