முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லீம் சமூகம்
முகம் கொடுக்கும் பிரச்சினை தொடர்பிலான முழு அறிக்கையையும் ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளது என்று தெரிவித்துள்ள
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அரசாங்க்தில்
நானும் ஒரு நடிகன் அதனால் நடிக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மடவளை சந்தியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நான் அமைச்சர் என்ற ரீதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்றவகையிலும் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடங்கிய அறிக்கையை கையளிக்க நடவடிக்கை எடுத்தேன்.
மறைந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின்
கோட்பாடு ஒன்றின்படி ‘சரியான முடிவை பிழையானநேரத்தில் எடுத்தால்
அதுவும்பிழையாகிவிடும்’ என்பதாகும். எனவே நாம் சரியான நேரத்தில் சரியான
முடிவை எடுக்கக் கடமைப் பட்டுள்ளேன். அதன்படி செய்துள்ளேன் என்றும் அவர்
தெரிவித்தார்.சிலர் எம்மைப் பற்றிக் குறை கூறித் திரிகின்றனர். அவ்வாறு
குறை கூறுபவர்கள் நாம் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அவர்களது
கோறிக்கையாகும். நான் அரசை விட்டு விலகத் தேவையில்லை. எனது அமைச்சர்
பதவியைத் தாரைவார்க்கவும் தேவையுமில்லை. அமைச்சு பதவியை தந்தவர்களுக்கு
அந்த அமைச்சு தேவையாயின் அதனை பெற்றுக் கொள்ளட்டும் என்றார்.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்டுள்ள
ஜனாதிபதிக்கு இவை எல்லாம் தெரியும். யாரும் தப்புக்கணக்குப் போட
வேண்டாம்.இந்த அரசு வித்தியாசமான பல்வேறு பாத்திரங்களைக் கொண்ட ஒரு
நாடகமேடை. அதில் பலருக்குப் பல்வேறு விதமான பாத்திரங்கள் உண்டு.மேர்வின்
சில்வாவிற்கு ஒருவகையான பாத்திரத்தை வகிக்கின்றார். அவரது கலியாணக்
கதையையும் எமது தலைவர் சகித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதே போல் விமல்
வீரவன்ச ஒருபாத்திரம். அவர் ஐ.நா.சபைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோதும்
எமது தலைவர் பால் கொடுத்து அவருடைய உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இதனால் நடப்பது ஒன்றுமில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.
அதேபோல் எமது அஸ்வர் எம்.பி மற்றொரு
பாத்திரத்தில் நடிக்கின்றார். அமைச்சர் றிசாட் இன்னொருபாத்திரம்,சம்பிக
ரணவக்க வேறொரு பாத்திரம். தலைமை நடிகருக்கு இது எல்லாம் தெரியும்.எனவே,
அதிலொறு நடிகனாக நானும் நடிக்கவேண்டியுள்ளது என்றார். அமைச்சர் பௌசியை தவிர
மற்ற எல்லா அமைச்சர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில்
வளர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி அதனை விமர்சிக்கின்றனர். இது பற்றி
எனக்கு எதுவித கவலையுமில்லை. நான் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை
என்றார்.
0 comments:
Post a Comment