குறித்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில 258 கிலோ கிராம்
போதைப்பொருட்கள் கொள்கலன் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை உள்ளிட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போதே இந்த தகவல் கிடைக்கப்பபெற்றுள்ளதாக அந்த பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி 250 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்கலாம் என பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை அதிகளவான போதைப்பொருள்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில்
அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாணக்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment