கொழும்பின் கொம்பெனித் தெரு பகுதியில் டாடா
நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள நிலத்திலிருந்து வெளியேற்றப்படும்
மக்களுக்கு நியாயமான நஷ்ட ஈடு வழங்க புதிய திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்
என நகர அபிவிருத்தி துறைக்கு இலங்கையின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொம்பெனித் தெரு பகுதியிலுள்ள ஏழு ஏக்கர் நிலத்தை
இந்தியாவின் டாடா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து
அப்பகுதியில் வசிக்கும் அறுநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் தாக்கல் செய்த
மனுக்களை பரிசீலித்தபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தமது கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்த நீதிபதிகள், தற்போதைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
புதிய நஷ்ட ஈட்டுத் திட்டம் சம்பந்தமாக
மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் பற்றி எதிர்வரும் 30ஆம் திகதி அரசாங்கம்
நீதிமன்றத்திடம் விவரம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment