• Latest News

    October 22, 2013

    அடுத்த வருட அரசாங்கத்தின் சேவை செலவீனங்கள 1542 பில்லியன் ரூபா! அதிகபட்சமாக பாதுகாப்பு மற்றும் நகர அமைச்சுக்கு!

    அடுத்தாண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனங்கள் அடங்கிய மதிப்பீட்டு அறிக்கை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டது. அடுத்தாண்டு அரசாங்கத்தின் சேவை செலவு ஆயிரத்து 542 பில்லியன் ரூபாவாகும். சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

    இச்சட்ட மூலத்திற்கு ஏற்பட அடுத்தாண்டு அரசாங்கம் பாது காப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு
    கூடுதலான தொகையை செலவிட வுள்ளது. 25 ஆயிரத்து 390 கோடி ரூபாவை இதற்கென செலவிட எதிர்பார்க்கின்றது. அதற்கு அடுத்ததாக நிதி அமைச்சுக்கு கூடுதலான செலவீனங்கள் ஏற்படுகின்றன. 16 ஆயிரத்து 434 கோடி ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளது.

    சுகாதார அமைச்சிற்கு 11 ஆயிரத்து 468 கோடி ரூபா செலவிடப்படும். அடுத்தாண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செலவீனம் 10 ஆயிரத்து 601 கோடி ரூபாவாகும். கல்வி அமைச்சிற்கான செலவீனம் 3 ஆ யிரத்து 884 கோடி ரூ?பாவாகும். தகவல் ஊடக துறை அமைச்சிற்கான செலவீனம் 268 கோடி ரூபாவாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடுத்த வருட அரசாங்கத்தின் சேவை செலவீனங்கள 1542 பில்லியன் ரூபா! அதிகபட்சமாக பாதுகாப்பு மற்றும் நகர அமைச்சுக்கு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top