• Latest News

    October 09, 2013

    உலகின் முதல் மலேரியா தடுப்பூசி 2015ல் விற்பனைக்கு வருகிறது

    லண்டன்,
    கொசு மூலம் பரவக்கூடிய ஒட்டுண்ணி நோயான மலேரியா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரைப் பலி வாங்குகின்றது. குறிப்பாக வறண்ட பகுதிகளாக விளங்கக்கூடிய ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் உள்ள குழந்தைகளிடத்தில் இந்த நோயின் தாக்கத்தினால் ஏற்படும் உயிர்ப்பலி அதிகமுள்ளது. இதனைத் தடுக்கும் விதத்தில் தடுப்பு மருந்து ஒன்றினைக் கண்டறிய கடந்த முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    இங்கிலாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் நிறுவனத் தயாரிப்பான ஆர்டிஎஸ்,எஸ் தடுப்பூசி கடந்த 18 மாதங்களாக சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. சிறுவயதினரிடையே இந்த மருந்தானது இறப்பு விகிதத்தைப் பாதியாகக் குறைத்தது. அது மட்டுமின்றி சிறு குழந்தைகளிடத்தில் இறப்பு சதவிகிதம் 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

    ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் வரும் 2014 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை விண்ணப்பத்தை அளித்தபின் விற்பனைக்கான இதன் தயாரிப்பு தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஎம்ஏ அனுமதி உரிமம் அளித்தபின் வரும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதாரக் கழகம் இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் ஆகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகின் முதல் மலேரியா தடுப்பூசி 2015ல் விற்பனைக்கு வருகிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top