பி.எம்.எம்.ஏ.காதர்;
இலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது சில அரசியல் அஸ்த்தமனங்களுக்கு வழிவகுக்கின்றன. இது தனிப்பட்டவர்களையும் பாதிக்கின்றது என்பது தவிர்கமுடியாத விடையமாக இருக்கிறது. இதில் நாங்களும் அள்ளுப்பட்டு விடுவோமோ என்ற ஆபத்தும், அச்சமும் இருக்கிது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது சில அரசியல் அஸ்த்தமனங்களுக்கு வழிவகுக்கின்றன. இது தனிப்பட்டவர்களையும் பாதிக்கின்றது என்பது தவிர்கமுடியாத விடையமாக இருக்கிறது. இதில் நாங்களும் அள்ளுப்பட்டு விடுவோமோ என்ற ஆபத்தும், அச்சமும் இருக்கிது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையைப்; பாராட்டி மருதமுனை மக்கள்; ஏற்பாடு செய்த பாராட்டு விழா கடந்த சனிக்கிழமை (19-10-2013) காலை 10.30 மணிக்கு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூhயில்; நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தாh.;
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச். காதர் இப்றாகீம் தலைமையில். நடைபெற்ற இந்த விழாவில் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கருஜயசூரிய, ஹசன் அலி, எச்.எம்.எம். ஹரிஸ் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல். தவம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.றஸாக் ஆகியோருடன், கல்வியலாளர்கள் உள்ளீட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
செனட்டர் மசூர்மௌலானா முன்னிலையில் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச். காதர் இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்ளாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் சேவையைப்; பாராட்டி சேவைக் கால நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துச்;; செய்திகள் அடங்கிய 'விருட்சம்' என்ற பெயரில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டதுடன், நினைவுச்;சின்னம் வாழ்த்துப்பத்திரம் என்பன வழங்கி பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில் :-அரசியல் யாப்புக்களை மாற்றுவதற்கு அரசாங்கங்கள் தன்னிச்சையாக எத்தனிக்கின்ற பொது ஏற்படுகின்ற ஆபத்துக்களில், அந்த விபத்துக்களில் நிறைய அரசியல் அஸ்தமனங்கள் நிகழ்கின்றன.
ஆனால் இன்று இருக்கின்ற அரசியல் நிலை அதைவிட வித்தியாசமானது. 2009ம் ஆண்டின் யுத்த வெற்றிக்குப்பின்னர் பல மாற்றங்களை காண்கின்றோம் இந்த நிலை பல மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றது.
இன்று நாங்கள் எதிர் நோக்குகின்ற சவால்களில் மிக முக்கியமானது இதைத் தவிர்க வேண்டும் எனபதற்காக வேண்டித்தான் நான் நண்பர் கருஜய சூரியாவிடம் பேசினேன். குடந் பொதுத் தேர்தலைச் சந்தித்த போது ஐக்கிய தேசியக ;கட்சியும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒன்றாக இருந்தது அந்த சந்தர்பத்திலே அதற்;கு முன்னைய ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் தற்போதய ஜனாதிபதியை எதிர்த்து இரானுத்தளபதியை களமிறக்கியிருந்தோம.; அந்த ஜனாதிபதத் தேர்தலில் தோல்வு என்பது எங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை;.
எங்களுக்கு இருந்த த பியைஸ் ஒரு சவால் எப்படியாவது இரண்டாவது தவணைக்கு வந்திருக்கின்ற ஜனாதிபதிக்கு மூன்றில் இரன்டு பெரும்பான்மை எடுப்பதைத்தடுக்க வேண்டும் என்பதுதான் அதற்காக நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தையே ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து செய்தோம்;.
தயவு செய்து சின்னத்தை மறந்து விடுங்கள் யானைச்சின்னத்தை ஒதுக்கிவிட்டு அன்னம் சின்னத்திலே போட்டியிட்டோம் எங்களையும் ஜே.வி.பியையும் சிலகட்சிகளையும் சேர்த்துக்கோண்டு ஒரே அணியாக ஒன்றாக நிற்போம்.
என்று விடாப்பிடியாக நின்றேன.ஆனால் கருஜயசூரிய போன்றவர்கள் யானைச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார்கள்.
இது தெரியாதவர்கள் விதம் விதமாகப் பேசலாம் அரசாங்கத்திற்குள்ளே விரும்பத்தகாதவனாக என்னைப் பலரும் பார்கலாம். 80பது களிளும் இப்படி நடந்தது அதில் மன்சூர் அவர்களும் பாதிக்கப்பட்டார். ஆதன் விவகாரமாகத்தான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி என்பது முன்னாள் அமைச்சர் மனசூருக்கு பெரும் சவாலாக வந்தது. என அமைச்சர் றவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment