• Latest News

    November 28, 2013

    தென் ஆபிரிக்கா அணியுடனான பரபரப்பான 2ஆவது ஒரு நாள் போட்டியினை பாகிஸ்தான் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

    போர்ட் எலிஸபெத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பினைத் தெரிவுசெய்தது. இப்போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டமையினால் அணிக்கு 45 ஓவர்களாக மட்டுப்படுப்படுத்தப்பட்டிருந்தது.
     
    முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களைப்பெற்றது. அதிகூடுதலாக அஹமட் ஷெஹ்ஷாட் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். உமர் அக்மல், சொஹைப் மஷுட் ஆகியோர் தலா 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் தென் ஆபிரிக்கா அணி வீரர் டேல் ஸ்டெய்ன் அபாரமாக செயற்பட்டு 6 விக்கெட்களைக் வீழ்த்தினார்.

    தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 45 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப்பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. ஹஸீம் அம்லா 98 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதமடிக்க தவறினார். அணித்தலைவர் ஏ.பி.டி வில்லியர்ஸ் 74 ஓட்டங்களையும் கியூ டி கொக் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
     
    பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஜுனைட் கான் 3 விக்கெட்களையும் அப்ரிடி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக அஹமட் ஷெஹ்ஷாட் தெரிவானார்.
     
    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளையும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் தொடரினைக் கைப்பற்றியுள்ளது. 3ஆவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென் ஆபிரிக்கா அணியுடனான பரபரப்பான 2ஆவது ஒரு நாள் போட்டியினை பாகிஸ்தான் அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றிபெற்றது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top