கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த
கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக்
கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும்
சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவரான அருட்தந்தை
மங்களராஜா அவர்கள் வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர். ஜோசப்
ஸ்பிட்டரி அவர்களுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வலைப்பாடு, வேரவில் மற்றும் கிரஞ்சி ஆகிய
கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 பெண்களுக்கு இவ்வாறு கருத்தடைக்கான
உள்ளீடு
ஒன்று கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி சுமார் 20 தாதிமார் மற்றும்
மருத்துவிச்சிகளினால் செலுத்தப்பட்டதாக அருட்தந்தை மங்களராஜா
குற்றஞ்சாட்டுகிறார்.
இந்த பெண்களை மிரட்டியே அவர்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்த தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாக
கூறுகின்ற வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான ஆர். ரவீந்திரன் அவர்கள்,
இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார்.
குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கான
எந்தவிதமான உத்தரவும் இல்லாத நிலையில் இப்படியாக நடந்திருப்பதாகவும் அவர்
கூறினார்.

0 comments:
Post a Comment