இப்னு செய்யத்,
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீட இரு மாணவர்கள் கோஸ்டியிடையே ஏற்பட்ட மோதலையடுத்து தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடம் நாளை (14.010.2013) அதன் முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் திறந்து வைக்கப்பட உள்ளதாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.
கடந்த 03ஆந் திகதி (அக்டோபர்) மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 53 மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 49 மாணவர்கள் 08ஆம் திகதியும், 04 மாணவர்கள் 10ஆம் திகதியும் பிணையில் விடுதலையானதோடு, மீண்டும் இவர்கள் அனைவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் நீதிபதி ரி.கருணாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீட இரு மாணவர்கள் கோஸ்டியிடையே ஏற்பட்ட மோதலையடுத்து தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடம் நாளை (14.010.2013) அதன் முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் திறந்து வைக்கப்பட உள்ளதாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.
தற்போது, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதனையடுத்து மீண்டும் நாளை (14.10.2013) முதலாம் வருட மாணவர்களுக்காக பிரயோக விஞ்ஞானபீடம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும், நிலைமைகளை அனுசரித்து வெகுவிரைவில் ஏனைய வருட மாணவர்களையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பதிவாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதே வேளை, கைது செய்யப்பட்ட 53 மாணவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றி; ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment