அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒரு சிலர் கலந்து
கொள்ளாமை கவலை தருவதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.
மக்களின் நம்பிக்கைகளை வீணடிக்கும் முறையில் அவர்கள் நடந்து
கொள்ளக்கூடாது என்று மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்
தெரிவித்தார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் பதவிப்பிரமாண வைபவம் கடந்த
வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சம்பிரதாய
பூர்வமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற போது
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் அதன்
உறுப்பினர்களும் மாகாண
சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் கலந்து
கொள்ளாமை பற்றி தனது கவலையைத் தெரிவித்த போதே ஆயர் இவ்வாறு
குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தனது கருத்தை தெரிவிக்கையில்,
வரலாற்றில் முதல் தடவையாக வடக்கின் அமைச்சர்களாக தெரிவு
செய்யப்பட்டவர்களின் பதவிப்பிரமாணத்தைக் கண்டு களிக்க ஏராளமான
பொது மக்கள் பிரசன்னமாயிருந்தமை கண்டு மிகுந்த
மகிழ்ச்சியடைந்திருந்தோம்.
அதேவேளை, தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு சில கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமை கவலை தருகின்ற ஒரு விடயமாகும். அதேவேளை கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது.

மக்கள் எந்தக் குறிகோளோடும் அபிலாஷைகளோடும் இவர்களை தெரிவு
செய்தார்களோ அதைப் பாழாக்கும் முறையில் இவர்கள் நடந்து
கொண்டுள்ளனர்.முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு முன்பாக
பதவிப்பிரமாணம் செய்து கொண்டது பற்றி பல விதமான அபிப்பிராயங்கள்
சொல்லப்பட்டன. முதலமைச்சர் தனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த
தீர்மானத்தை மேற்கொண்டிருக்கலாம். அரசாங்கத்துடன் பேசுவதன் மூலமே
தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறமுடியும் என்பதை சிந்தித்தே அந்த
முடிவை மேற்கொண்டிருந்தார்.
அது மாத்திரமன்றி இலங்கை அரசுடன் பேச வேண்டும். சர்வதேச
சமூகத்துடன் பேச வேண்டும் உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்போது தான் சம நிலையான ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும்.அப்போது
தான் தீர்வொன்றுக்கு வழிபிறக்க முடியும். அவர் அவ்வாறான ஒரு முடிவை
எடுத்தது பற்றி நான் பெருமைப்படுகின்றேன். அவரின் தீர்க்கதரிசன
முடிவை நாம் எல்லோரும் ஆதரிக்க வேண்டும்.
முதலமைச்சர் சத்தியப் பிரமாண வைபவத்துக்கும் கூட்டமைப்புக்குள்
உள்ள பலர் சமுகமளிக்காமை கவலை தருகின்ற விடயமாகும்.தேசியத் தன்மை
வாய்ந்த சுயநிர்ணயத்துடன் கூடிய தீர்வொன்றை மக்களுக்குப் பெற்றுக்
கொடுக்க வேண்டும். வடக்குக் கிழக்கை இணைத்த முறையில் காத்திரமான
தீர்வொன்றை அடைய வேண்டுமென்பதற்காகவே அவரின் செயற்பாடுகள் அமைந்து
காணப்படுகின்றன.வடக்கு கிழக்கு பிரிக்க முடியாத இணைவு கொண்டது.
அந்தப் பிரதேசத்துக்கு தேசியத்தை ஏற்றுக்கொண்டு சுயநிர்ணய
அடிப்படையிலான தீர்வொன்றை எங்களுக்குப் பெற்றுத் தருவார்கள் என்ற
காரணமாகவே இந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு மக்கள் அமோக ஆதரவை
வழங்கியிருக்கிறார்கள்.
எனவே இதற்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற போக்கு அண்மையில் குறைந்து போனதாகவே காணப்படுகின்றது.
மக்கள் அணிதிரண்டு தமிழ்த் தேசியத்துக்கு அளித்த ஆதரவும் நோக்கமும் தளர்ச்சி அடைந்து விடுமோ என நாம் இப்பொழுது அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே மக்களுடைய நம்பிக்கையை நாம் யாரும் வீணடிக்க கூடாது பாழாக்கக் கூடாது.இதை மனதில் கொண்டே முதலமைச்சர் செயற்பட்டு வருகிறார் என நம்புகின்றோம். எனவே எமது கட்சிக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை எனக்குக் கிடைக்கவில்லை என்பதனை மறந்து நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். மொத்தத்தில் அமைச்சர் பதவி நான்கு மட்டுமேயுண்டு. இதை வெற்றி பெற்ற 30 பேருக்கும் பங்கிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தகைமையுள்ளவர்களுக்கும் திறமையுள்ளவர்களுக்கும் மட்டுமே
அத்தகைய பதவிகளை வழங்க முடியும். அனுபவத்தின் அடிப்படையிலும்
மக்களின் நம்பிக்கைக்கு உரிய முறையிலும் இப்பதவிகள்
முதலமைச்சரினால் வழங்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை நாம் மனம்
கொள்ள வேண்டும்.எனவே கூட்டமைப்புக்குள் இருக்கின்றவர்கள்
பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ போட்டி போடுவதையும்
ஒருவரையொருவர் விமர்சிப்பதையும் விட்டொழித்து எமது இலக்கையும்
மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற ஒன்றுபட்டு நில்லுங்கள் என
மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.
இவ்வாறானதொரு சூழ்நிலையைத் தவிர்த்துக் கொள்வதற்காக
கூட்டமைப்புக்குள் அங்கம் பெறும் ஐந்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த
முறையில் பதிய வேண்டுமென்ற கனவைக் கண்டுகொண்டிருக்கிறோம். அதற்கு
எல்லோரும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டுமென்பதே எமது
எதிர்பார்ப்பாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தான்
ஒற்றுமையையும் தமிழர்களுக்கான உரிமையையும் தீர்வையும் பெற்றுத்
தரமுடியும்.எனவே தனித்துவ சிந்தனைகளை மறந்து பொதுச் சிந்தனையை
வளர்க்க தனி தன்மையை விட்டு பொதுநன்மையை வென்றெடுக்க ஒவ்வொருவரும்
உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

0 comments:
Post a Comment