• Latest News

    October 10, 2013

    ஆசிரியர் திலகம் அக்பர் மருதமுனை கல்வி வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியவர்: அன்ஸார் பழீல் மௌலானா

    பி.எம்.எம்.ஏ.காதர்
    ஆசிரியத்துவத்தின் அணிகலனாகவும், ஆளுமைமிக்க அதிபராகவும்,பல்வேறு பரிமாணங்களைக் கண்ட ஆசிரியத்திலகம் எஸ்.எச்.எம்.அக்பர் அவர்களுடைய திடீர் மரணம் மருதமுனை மாணவ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி  விரிவுரையாளர்     அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா தெரிவித்தார்.
    அல்;-மனார் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் ஆசிரியராக இருந்து பெரும் பங்காற்றிய எஸ்.எச்.எம்.அக்பர் ஆசிரியர் அண்மையில் காலமானார் இவருக்கான இரங்கல் கூட்டம் அண்மையில் அல்-மனார் மத்திய கல்லூரியில் நடை பெற்றது. இதில் விஷேட இரங்கல் உரையாற்றிய போதே விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    அல்-மனார் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் நடை பெற்ற இந்த இரங்கல் கூட்டத்தில் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா மேலும் உரையாற்றுகையில் :-மர்ஹும் அக்பர் ஆசிரியர் ஆரம்பக்கல்விக்கு பயிற்றப்பட்டாலும் இடை நிலைக்கல்வி சாதாரண மற்றும் உயர்தரக் கல்வி என்பவற்றைக்கற்பிப்பதில் காத்திரமான பங்களிப்பை நல்கினார்.
    அல்;-மனாரின் பௌதீக வள அபிவிருத்தி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடு களிலும் அதீத அக்கறையுடன் செயற்பட்டாh.; எந்த வேலையைப் பொறுப்  பெடுத்தாலும் முனைப்போடு செயற்பட்டு வெற்றிகரமாகச் செய்து முடிப்பதில் வல்லவராக செயற்பட்டார்.
    மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றுவதில் மிகவும் பணிவுடணும்,  பண்புடனும் நடந்து கொள்வார். இவரது திடீர் மரணம் மருதமுனை மாணவ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அன்ஸார்  மௌலானா மேலும் தெரவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆசிரியர் திலகம் அக்பர் மருதமுனை கல்வி வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியவர்: அன்ஸார் பழீல் மௌலானா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top