• Latest News

    October 24, 2013

    பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது பொருத்தமற்றது; பொது பல சேன

    இன்று பௌத்தர்களுக்கு  ஒரு உறுதியான சமய தலைமத்துவம் தேவை. பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது. ஆகவே அனைத்து பீடங்களையும் இனைணத்த ஒரு ‘சங்கராஜர்’ (பெளத்த மதத்தலைவர்) ஒருவர் தேவை.அதனை உருவாக்குவதற்கும் இன்று நாம் தலதா மாளிகைக்கு முன் உறுதிகொள்கின்றோம் என பொது பல சேனா தெரிவித்துள்ளது  .
    கொழும்பிலிருந்து வாகன பேரணியாக வந்த ஹலாலுக்கு எதிரான பேரணி   கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உரையாற்றிய  பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
    பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் அதன் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உற்பட தேரர்கள் மற்றும் பொதுபல சேனாவின் அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர்,
    ஹலால் நடைமுறை சம்பந்தமாக கடந்த காலத்தில்ஒரு தீர்வு வழங்கப்பட்டிருந்தது. ஜமஇயதுல் உலமா சபையும் இலங்கை வர்த்தக சபையும் ஹலால் சம்பந்தமாக முன்வைத்த  தீர்வை   அவர்கள்  நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். இம்முறை ஹலால் இலட்சினை மட்டுமல்ல ஹலால் முறையையே முடிவுக்கு கொண்டுவரும் வரை நாங்கள் போராடுவோம். ஏற்கனவே பல நிறுவங்கள் ஹலால் சான்றிதழை பெற்றுகொண்டுள்ளன.
    இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமல்ல. ஹலாலை தடை செய்ய கூறும் போராட்டமும் அல்ல. முஸ்லிம்கள் ஹலால் உணவுகளை சாப்பிடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
    ஆனாலும் சிங்கள ,இந்து மற்றும் கிரிஸ்தவ மக்களுக்கு ஹலால் தேவை இல்லை. அல்லாஹ்வுக்கு  அர்ப்பனிக்கப்பட்ட உணவு வகைகளை மற்ற மதத்தினருக்கு  சாப்பிட முடியாது.
    ஹலாலை முடிவுக்கு கொண்டு வருவதாக அரச தரப்பில் எங்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் அரசு அதனை கண்காணிக்க வில்லை. இன்று ஹலால் நடைமுறை பல வடிவங்களில் மிகவும் வேகமாக அமுல்படுத்தப்படுகிறது. அதனை எதிர்த்தே நாங்கள் மீண்டும்  களம் இறங்கியுள்ளோம். என்று தெரிவித்துள்ளார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது பொருத்தமற்றது; பொது பல சேன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top