வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பான முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவல்ல. அது தனியே தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கூட்டுக் கட்சிகளின் பொது வேட்பாளராகக் கொண்டு வரப்பட்டுத் தாம் அனைவரும் இணைந்து பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்த முதலமைச்சர் அவர்கள் இப்போது கூட்டுக் கட்சிகளுக்குத் தானே தலைவர் என்பது போலவும், அக்கட்சிகளின் தலைமைகளை அடக்கி ஆள முனைந்து வருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியிலுள்ள பலரும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண சபைக்கு உரிய அமைச்சர்கள் தெரிவுஇ முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவல்லஇ தனியே தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு. அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு நான் யாழ்ப்பாணத்தில் நின்ற போதிலும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.இதேவேளை கூட்டுக் கட்சிகளின் பொது வேட்பாளராகக் கொண்டு வரப்பட்டுத் தாம் அனைவரும் இணைந்து பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்த முதலமைச்சர் அவர்கள் இப்போது கூட்டுக் கட்சிகளுக்குத் தானே தலைவர் என்பது போலவும், அக்கட்சிகளின் தலைமைகளை அடக்கி ஆள முனைந்து வருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியிலுள்ள பலரும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளான புளொட்இ ரெலோ போன்ற கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தனியே தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்களே அந்த கூட்டத்தை நடத்தி முடிவும் எடுத்துள்ளார்கள்.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அமைச்சர்கள் பெயரில் எமக்கு திருப்தி இல்லை. எனவே தமிழரசுக் கட்சி எடுத்துள்ள இந்த முடிவுகளை பார்க்கும் போது அவர்கள் சர்வதிகாரத்தை நோக்கி செல்வதாகவே எமக்கு தோன்றுகின்றது.
இந்த முடிவுகள் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முன் னெடுப்புக்களை குழப்பும் நடவடிக்கை யாகவே அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாண சபையினை எமது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார போக்கில் தனிப்பட்ட முடிவினை எவரும் எடுக்க முடியாது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளின் சம்மதத்திற்கிணங்கவே முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க ரீதியானஇ தனிப்பட்ட முடிவுகளே எட்டப்பட்டு வருகின்றன.
தேர்தல் காலத்தில் ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டுஇ தேர்தல் வெற்றியின் பின்னர் மக்கள் தந்த ஆணையினை துஷ்பிரயோகம் செய்வதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சம்பந்தன்இ சுமந்திரன்இ விக்னேஸ்வரன் ஆகியோரை மாத்திரம் உள்ளடக்கிய கட்சியல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை உணர மறுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பலர் வடக்கில் இருக்கும் போது கொழும்பிலுள்ள சிலரை ஆலோசகர்களாக உள்வாங்கவும் முதலமைச்சர் முடிவு செய்திருக்கிறார். இதனால் வடக்கிலுள்ள மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கவுள்ளது? இங்கு கஷ்டப்பட்டவர்கள் சும்மா இருக்கஇ கொழும்பிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை என்றால் இதில் என்ன நியாயமிருக்கிறது?
இதுபோன்ற பல தவறுகளை கூட்டமைப்பின் தலைமை மேற்கொண்டு வருவதை தட்டிக்கேட்கின்ற எம்மை குழப்பவாதிகளாக ஊடகங்களும் தமிழரசுக் கட்சி விசுவாசிகளும் சித்திரிப்பது வேடிக்கையானதே. நாங்கள் ஒற்றுமையாக சேர்ந்து செயலாற்ற தயாராக இருக்கின்றோம். அதற்காகத்தான் மக்கள் எம்மை ஆதரித்திருக்கிறார்கள். ஆனால் அதனை கூட்டமைப்புக்குள்ளிருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

0 comments:
Post a Comment