• Latest News

    October 05, 2013

    வடக்கின் அமைச்சுப் பொறுப்புக்கள் கற்றவர்களுக்கு மட்டுமே! - விக்னேஸ்வரன்

    வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களாக நியமிப்பதற்கு கல்வித் தகைமை மிக்கவர்களின் பெயர்ப்பட்டிய லை மாத்திரம் தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

    போதியளவு கல்வித் தகைமைகள் இல்லாதவர்களை தனது அமைச்சரவைக்கு உள்வாங்குவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    வட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் விசேட கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    வடக்கின் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைக்குச் நடாத்துமாறும், தனக்கு மாகாண நிருவாகத்தை வழங்குமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டத்தில் கூடியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளிடம் வேண்டியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கின் அமைச்சுப் பொறுப்புக்கள் கற்றவர்களுக்கு மட்டுமே! - விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top