மாத்தறை நகரப் பகுதியில் ஏற்பட்ட மோதலில்
எழுவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மாத்தறை
வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. மோதல் ஏற்பட்ட நிலையில் இங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை
பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இப் பிரதேசத்தில்
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்
குழுக்களுக்கு இடையிலேயே மோதல்
ஏற்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை
உறுப்பினர் மைத்திரி குணரத்னவின் தந்தை ஹேமன் குணரத்ன கைது
செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்
ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சித் தலைமைப்
பதவியிலிருந்து விலகுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
நேற்று வெள்ளிக் கிழமை மாலை இணக்கம் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக
திங்கட்கிழமை கூடவிருக்கும் கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழுக்
கூட்டத்தில் அறிவிக்கப்படவிருப்பதாக தெரிய வருகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தம்ம
கித்தியாராம (பொல்வத்த விகாரை) வில் இடம்பெற்ற முக்கிய மகா சங்கத்தினருடனான
சந்திப்பின் போதே ரணில் விக்கிரம சிங்க தலைமைத்துவப் பதவியிலிருந்து
விலகுவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பாரிய நெருக்கடியை முடிவுக்
குக் கொண்டு வரும் பொருட்டு அநுராதபுரம் சாரானந்த பிரிவெனாபதி கிராம்பே
ஆனந்த ரோ தலைமையிலான 12 மகா சங்கத்தினர்களுடன் இந்தச் சந்திப்பு
இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற சந்திப்பில் கட்சியை
வழிநடத்துவதற்கு 7 பேரடங்கிய உயர் சபையை அமைப்பது தொடர்பாக ஆலோசனை
முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயப்படும் வேளையில் எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரம சிங்க தான் தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்கிக்
கொள்ளத் தயாராக இருப்பதாக மகா சங்கத்தினர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
என்றும் தெரிவிக்கப்படுகிறது

0 comments:
Post a Comment