இலங்கையில் சுமார் 40 கோடி டாலர்கள் முதலீட்டில் கெஸினோ ஆடம்பர
நட்சத்திர விடுதியொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியாவின் பெரும்
வர்த்தகர் ஜேம்ஸ் பேக்கருக்கு வரிவிலக்கு அளித்து உதவுவதற்காக இலங்கை
அரசாங்கம் இந்த வாரத்தில் கொண்டுவர இருந்த சட்டத் திருத்தத்தை திடிரென்று
இடைநிறுத்தி வைத்துள்ளது.ஜேம்ஸ் பேக்கருக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவது தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும், கஸினோ செயற்திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே வெளியான கெசட்- வர்த்தமானி அறிவித்தல்களை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரசாங்கம் கெஸினோ சூதாட்டத்தை தொடங்க புதிய அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை என்றும் இருக்கும் அனுமதிப் பத்திரத்தை வேறு தரப்புக்கு வழங்குவதில் தவறு ஏதும் இல்லை என்றும் அதனால் நாட்டில் கலாசாரம் சீரழிந்துவிடாது என்றும் அமைச்சர் கூறினார்.
'கலாசார சீரழிவு அல்ல'- அமைச்சர்
புதிய அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று
கூறினாலும், ஒஸ்ட்ரேலியாவின் ஜேம்ஸ் பேக்கர் இலங்கையில் கெஸினோ சூதாட்ட
மையத்தை திறக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறாரே என்று பிபிசி அமைச்சரிடம்
சுட்டிக்காட்டியது.
அதற்குப் பதிலளித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, 'ஜேம்ஸ் பேக்கர் ஆஸ்திரேலியாவின் நான்காவது பணக்காரர், அவரது பெரும் ஹோட்டல் முதலீட்டை கெஸினோவைக் காரணம் காட்டி புறந்தள்ளிவிட முடியாது,அவரது வருகையின் மூலம் நாட்டுக்குள் வருவதற்கு பல முதலீட்டாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று கூறினார்.
அதற்குப் பதிலளித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, 'ஜேம்ஸ் பேக்கர் ஆஸ்திரேலியாவின் நான்காவது பணக்காரர், அவரது பெரும் ஹோட்டல் முதலீட்டை கெஸினோவைக் காரணம் காட்டி புறந்தள்ளிவிட முடியாது,அவரது வருகையின் மூலம் நாட்டுக்குள் வருவதற்கு பல முதலீட்டாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று கூறினார்.
இதற்கிடையே, அரசாங்கத்தின் கஸினோ முதலீட்டை
ஊக்குவிக்கும் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து கொழும்பில்
ஆர்ப்பாட்டமொன்றும் இன்று நடந்துள்ளது.
கஸினோ சூதாட்டத்திற்காக வெளிநாட்டுக் கம்பனிக்கு
தமது பிரதேசத்தை வழங்குவதன் மூலம் கலாசார சீரழிவு ஏற்படும் என்று கொழும்பு
கொம்பனித்தெரு மக்கள் முன்னணி என்ற அமைப்பு இந்தப் போராட்டத்தை நடத்தியது.
இதற்கிடையே, கெசினோ சட்டமூலத்தை கொண்டுவர வேண்டாம்
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலும் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி
வைத்துள்ளது.
BBC -
0 comments:
Post a Comment