இலங்கை 1982 ம் ஆண்டுக்கு பின்பு யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சொத்துகள் சம்பந்தமான விபரங்களை
சேகரிப்பதற்கு இலங்கை குடிசன புள்ளிவிபரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த
பரிந்துரையொன்றுக்கு அமையவே இந்தத் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக இலங்கை
குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் டீ. ஸீ. எஸ். குணவர்தன
பிபிசியிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தாம் இந்தப் புள்ளி விபர
மதிப்பீட்டை நடத்தத் தாம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த மதிப்பீடு
எதிர்வரும் 25 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கிராம சேவகர்கள் ஊடாக நாடு பூராவும் அமைந்துள்ள
வீடுகள் மற்றும் அகதி முகாம்களுக்குச் சென்று தாம் இந்த மதிப்பீட்டை நடத்த
தீர்மானித்துள்ளதாகவும் இலங்கைக் குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின்
பணிப்பாளர் டீ.ஸீ. எஸ். குணவர்தன கூறினார்.
BBC-
0 comments:
Post a Comment