யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட்
கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி
நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அம்மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவர் இதன்போது
கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவர், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
இதையடுத்து, யாழ்.பொதுநூலக அருகே அவர்கள் கூடியபோது, சிறிலங்கா காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கலைத்தனர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வாகனமும் வழிமறிக்கப்பட்டது.
இதனால், அவர் பின்வாயில் வழியாக அனுப்பி வைக்கப்பட்டார்.



0 comments:
Post a Comment