பி.எம்.எம்.ஏ.காதர்
24 வது சர்வதேச சிறுவர் தின இலங்கைக்கான நிகழ்வு இன்று (20-11-2013) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடை பெற்றது. இதற்கு யுனிசெப் நிறுவனம்; அணுசரனை வழங்யிருந்தது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்; எம். ரி. அப்துல் நிஸாம் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மெக்கோலி கலந்த கொண்டார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் அபேய குணவர்த்தன கலந்து கொண்டார்.
மேலும் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் யு.எல். எம். ஹாஸிம் ,உள்ளீட்ட பிரதிக் கல்விப்; பணிப்பாளர்கள், உதவிக்; கல்விப் பணிப்பாளர்களுடன் மருதமுனை சமஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம். தௌபீக்; மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இங்கு மாணவர்களின் கலை, கலாசார, மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், சித்திரக் கண்காட்சிகளும் இடம் பெற்றன. 1500 முஸ்லிம், தமிழ், சிங்கள மாணவர்கள் நிகழ்சிகளில் பங்கு பற்றினார்கள். 2500க்கு மேற்பட்ட மாணவர்களும். 500க்கு மேற்பட்ட அதிபர்களும், ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்த கொண்டனர்;
0 comments:
Post a Comment