• Latest News

    November 17, 2013

    நிந்தவூரில் தற்போது வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள்; எங்கும் பதட்டம், ஆயிரக் கணக்கில் பொது மக்கள் ஒன்று கூடல்.........

    நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை இன்று இரவு 11 மணியளவில் (சற்று முன்னர்) பொது மக்கள் கடற் கரைப் பூங்காவிற்கு அருகில் மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட மர்ம நபர்களை பொது மக்கள் அடையாளங் கண்டுள்ளனர். தற்போது இவர்கள் பொது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை மேற் கொண்டிருக்கின்றார்கள்.
    இதே வேளை, நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பொது மக்களை ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன.
    பொது மக்களினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாத்து அங்கிருந்து கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

    மேற்படி சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் கடற் கரையில் வைத்து தங்களது சீருடையை அணிவதற்கு ஏற்கனவே அணிந்து இருந்த டீசேர்ட்டை மாற்றுவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவர்கள் அகப்பட்டுள்ளார்கள்.
    தற்போது கடற் கரையில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கூடியுள்ளார்கள்.
    நிந்தவூர் பிரதேசத்தின் பல இடங்களிலும் பாதுகாப்பு தரப்பினர் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
    நிந்தவூர் பிரதேசம் ஒரு பதட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் தற்போது வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள்; எங்கும் பதட்டம், ஆயிரக் கணக்கில் பொது மக்கள் ஒன்று கூடல்......... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top