முஹம்மட் றிபாய்;
நிந்தவூரில் அண்மைக்காலமாக நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலையினைக்கருத்திட்கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விஷேட பாதுகாப்புக் கூட்டம் இன்று (17.11.2013) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.K. தகனக, காரைதீவு இராணுவ பொறுப்பதிகாரி, நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி R.U. அப்துல் ஜலீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், பிரதேச சபை தவிசாளர் M.A.M தாஹிர், பிரதேச சபை எதிர்கட்சித்தலைவர் Y.L. சுலைமாலப்பை, பிரதேச சபை உறுப்பினர்களான S.I.M.ரியாஸ் மற்றும் M.T. ஜப்பார் அலி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், விழிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து தங்கள் கருத்துக்களை பரிமாறினார்கள்.

இதேவேளை, நிந்தவூரில் அண்மைக்காலமாக இடம்பெறும் திருடர்களின் சேஷ்டைகள் பற்றி பொலிசாரின் கவனதிற்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த கூட்டத்தில் விழிப்புக்குழுக்கள் சம்பந்தமாகவும், அவர்கள் விடயத்தில் கிராம சேவகர்களும் பொலிசாரும் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர். மேலும் இந்த அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் இங்கு இடம்பெறா வண்ணம் இருக்க இரவு வேளைகளில் சிவில் பாதுகாப்புக் குழுவினரோடு இணைந்து பொலிசாரும், ஜும்மா பள்ளி நிர்வாகத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபாடுவார்கள் எனவும், இரவு வேளைகளில் சந்தேகதிற்கிடமாக யாராவது நடமாடுவதைக் கண்டால் பொலிசாருக்கோ அல்லது ஜும்மா பள்ளி நிர்வாகதிற்கோ அறியத்தரவேண்டும் எனவும், இரவு வேளைகளில் ஒவ்வொருத்தரும் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments:
Post a Comment