• Latest News

    November 19, 2013

    நிந்தவூரில் பதற்றம்! பெருமளவில் பொலிஸார் குவிப்பு!! போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

    நிந்தவூர் பிரதேசத்தில் இன்று காலை மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பொலிஸாருக்கும். நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர். பைசால் காசிம் எம்.பி, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர்களுக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய உறுதியை பொலிஸார் வழங்கினார்கள்.
    இதனையடுத்து நிந்தவூர் பொது மக்களுக்கு பள்ளிவாசலின் ஒலி பெருக்கி மூலமாக அமைதி காக்குமாறும், ஹர்த்தலை கைவடுமாறும் கேட்டுக் கொள்ளப்ப்பட்டன. ஆயினும், இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இன்று காலையும் வீதித் தடைகளை ஏற்படுத்தினார்கள். இதனால், கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியிலான போக்குவரத்து இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்டது.
    இதனைத் தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட டிஐஜி தலைமையிலான பெருமளவிலான பொலிஸார் வீதிகளில் கூடி நின்ற பொது மக்களை கலைந்து செல்லுமாறும், வீதித் தடைகளை அகற்றுமாறும் ஒலி பெருக்கி மூலமாக கேட்டுக் கொண்ட போதிலும், பொலிஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டார்கள். அத்தோடு, கனரக வாகனத்தினை பயன்படுத்தி வீதித்தடைகளை அகற்றினார்கள்.
     இன்று நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலைகள் யாவும் வழமை போன்று இயங்கியன. ஆயினும், ஏற்பட்ட பதற்றம்  காரணமாக  பாடசாலைகள் மு.ப 11 மணியளவில் கலைக்கப்பட்டன. இதே வேளை, நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அருகாமையில் நின்று கொண்டு பொலிஸாருக்கு கற்களை வீசிக் கொண்டிருந்தவர்களை நோக்கி கண்ணீர் புகை பிரயோகம் மேற் கொள்ளப்பட்டன. இதனால், அருகில் பாடசாலைக்குள்ளும் புகை சென்றதனால் மாணவிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானார்கள். மாணவிகளும், ஆசிரியர்களும் பதற்றத்திற்குள்ளானார்கள். இதனை அடுத்து பாடசாலை கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    தற்போது நிந்தவூர் பிரதேசத்தில் பிரதான வீதியினுடனான போக்கு வரத்து சீரமைக்கப்பட்டுள்ளன.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் பதற்றம்! பெருமளவில் பொலிஸார் குவிப்பு!! போக்குவரத்து வழமைக்கு திரும்பியது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top