• Latest News

    November 19, 2013

    ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சான்றிதழ் வழங்கிவைப்பு


    கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற சகல மாணவர்களுக்குமான சான்றிதழ் கல்வி அமைச்சரின் அறுவுறுத்தலுக்கமைவாக 18.11.2013 ஆந் திகதியன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாயலத்தில் அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் ஆகியோரால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  
    இந்தச் சான்றிதழ் இலங்கைப் பரீட்சைத்திணைக்களத்தினால் அனுப்பு வைக்கப்பட்டு நாளடாவிய ரீதியில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் PM. மீரா முகையடீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
    மேலும் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான திருமதி ஏ.பீ. பரீதா, எஸ்.எல்.மன்சூர், திருமதி அமீறா றிம்லான், திருமதி றஹீமா மன்சூர், ஹமீமா வீவி, எம்.எம். விஜிலி, ஏ.எம். ஜவாஹிர், எம்.எஸ். சிறாஜீடீன், திருமதி மாஜிதா தாஸீம், பௌசியா சரிப் ஆகியோரின் பங்குபற்றலுடன் சான்றிதழ் நிகழ்வு சிறப்புப் பெற்றது.
    அத்துடன் பரீட்சைக்குத் தோற்றிய 130 மாணவர்களில் 41 பேர் சித்தியடைந்தவுடன் 120 பேர் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது முக்கிய விடயமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சான்றிதழ் வழங்கிவைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top