![]() |
| சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருடன் ரவூப் ஹக்கிம் |
கல்முனை மாநகர சபையின் மேயர் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிமுடன் சாய்ந்தமருது பிரதேச முக்கியஸ்தர்கள் பேச்சுக்களில் ஈடபட்டனர்.
இச்சந்திப்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா,உப தலைவர் எம்.ஐ.மஜீத், செயலாளர் எம்.ஏ.அப்துல் ஹமீட், எம்.ஐ.எம்.இஸ்மாயில், எம்.எம்.மிஹ்லார், எம்.ஐ.உதுமாலெப்பபை, ஏ.ஜெமீல்சாலி ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
இதே வேளை, சாய்ந்தமருது மத்திய குழுவினருடனான மற்றுமொரு சந்திப்பும் ரவூப் ஹக்கிமுடன் இடம் பெற்றது. இச்சந்திப்பின் போதும் மேயர் விவசாரம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.இச்சந்திப்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா,உப தலைவர் எம்.ஐ.மஜீத், செயலாளர் எம்.ஏ.அப்துல் ஹமீட், எம்.ஐ.எம்.இஸ்மாயில், எம்.எம்.மிஹ்லார், எம்.ஐ.உதுமாலெப்பபை, ஏ.ஜெமீல்சாலி ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
இவ்விரு குழுவினருடனான சந்திப்புக்களின் போதும் ரவூப் ஹக்கிம் தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
![]() |
| சாய்ந்தமருது மு.காவின் மத்திய குழு உறுப்பினர்களுடன் ரவூப் ஹக்கிம் |


0 comments:
Post a Comment