• Latest News

    November 17, 2013

    கல்முனை மாநகர மேயராக நிஸாம் நாளை பதவியேற்பு; இராஜினாமா செய்த மேயர் சிராஸின் விசுவாச ஊழியர்கள் பழிவாங்கல்? ஆணையாளர் கவனத்திற்கு கொண்டுவந்தார் பிர்தெளஸ்

     கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு விசுவாசமாக இருந்த சில ஊழியர்கள் பழி வாங்கப்படு வதாகவும் இது தொடர்பில் மு. கா. தலைவரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கல்முனையிலிருந்து கிடைக்கப்பெற்ற தக வல்கள் தெரிவித்தன.  இதே வேளை கல்முனை மாநகர சபையின் ஐந்தாவது மேயராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நாளை திங்கட்கிழமை பதவியேற்கிறார். மாநகர சபையாக கல்முனை நகரம் தரமுயர்த்தப்பட்ட பின்னர் பதவியேற்கும் ஐந்தாவது மேயராக நிசாம் காரியப்பர் விளங்குகின்றார். மர்ஹ¥ம் அஷ்ரப்பின் நெருங்கிய உறவினரான நிசாம் காரியப்பர் ஒரு பிரபல சட்டத்தரணி.
    அத்துடன் மு. கா. வின் பிரதித் தலைவரும் கூட. கல்முனை மாநகர சபைக்கென இடம்பெற்ற முதலாவது தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் நிர்வாகத்தைக் கைப்பற்றிய போதும் சட்டச் சிக்கல்கள் காரணமாக மு. கா. சார்பான சுயேச்சைக் குழுவில் போட்டியிட்ட அஸ்மிர் மாநகர சபையின் முதலாவது மேயராகப் பதவியேற்று சுமார் 2 வருடங்கள் பணிபுரிந்தார். அதன்பின்னர் மு. காவின் தேசிய அமைப்பாளர் ஹரீஸ் மேயராகப் பதவியேற்றார். ஹரீஸ் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பியானதை யடுத்து பிரதி மேயராகவிருந்த முன்னாள் செனட்டர் மசூர் மெளலானா பதவியேற்றார். கல்முனை மாநகர சபையின் இரண்டாவது தேர்தலிலும் மு. கா. வே ஆட்சியைக் கைப்பற்றியதுடன் சிராஸ் மீராசாஹிப் மேயராகப் பதவியேற்றார். நிசாம் காரியப்பர் துணை மேயராகப் பொறுப்பேற்றார். சிராஸ் மீராசாஹிப் மேயராகப் பதவியேற்ற போதும் அவர் இரண்டு வருடங்கள் மாத்திரமே பதவி வகிப்பார் என மு. கா. அறிவித்ததையடுத்து அந்த இரண்டு வருட காலம் முடிவடைந்ததனால் சிராஸைப் பதவி விலகுமாறு கட்சி பணித்ததும் அவர் விலக மறுத்ததும் கட்சிக்குள் பல்வேறு சர்ச்சைகள் உருவாக வழிவகுத்தன. எனினும் கடந்த 8 ஆம் திகதி காலை மு. கா. தலைவர் ஹக்கீமிடம் சிராஸ் தனது திடீர் இராஜினாமாக் கடிதத்தை கையளித்ததன் பின்னர் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

    அதன் பின்னர் மு. கா. தலைவருடன் இணைந்து சிராஸ் மீராசாஹிப் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில்இ மேயர் விவகாரத்தைப் பயன்படுத்தி தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற ஒரு சிலர் சதித்திட்டம் தீட்டிய விடயம் தனக்கு தெரியவந்ததாகவும் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாது தனது சுயவிருப்பத்தின் பேரிலேயே தான் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும் தெரிவித்தார்.

    கல்முனை மாநகர சபை வரலாற்றில் இதுவரை எந்தவொரு மேயரும் தனது முழுமையான பதவிக் காலத்தை பூர்த்திசெய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இது இவ்வாறிருக்க கல்முனை மாநகர மேயர் சிராஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்த மறுகணமே மாநகர சபையில் பணிபுரியும் மேயர் சிராஸ¤க்கு விசுவாசமான ஊழியர்கள் பழிவாங்கப்படுவதாகத் தெரிவிக் கப்படுகின்றது. மேயர் பதவி விலகல் சர்ச்சையின் போது சிராஸே தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்த மாநகர சபை உறுப்பினரான பிர்தெளஸ் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தான் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையின் மூலகர்த்தாக்கள் யார் யாரென தமக்குத் தெளிவாகத் தெரியாத போதும், பாதிக்கப்பட்டவர்கள் பலர் தம்மிடம் முறையிட்டதாகத் தெரிவித்தார். எனினும் இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முற்றுமுழுதான தீர்வு கிட்டவில்லை. எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பில் புதிய மேயராகப் பதவியேற்கும் சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் நாம் வினவினோம், எனக்கு எதுவுமே தெரியாது. நான் உத்தியோகபூர்வமாக இன்னும் பதவியேற்கவுமில்லை.

    பதவியேற்கும் வரை எவருக்கும் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லலை என்றார்.
    தினகரன்-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர மேயராக நிஸாம் நாளை பதவியேற்பு; இராஜினாமா செய்த மேயர் சிராஸின் விசுவாச ஊழியர்கள் பழிவாங்கல்? ஆணையாளர் கவனத்திற்கு கொண்டுவந்தார் பிர்தெளஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top