கல்முனை மாநகர சபையில் ஏற்பட்டுள்ள இவ் விடயம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கேட்டபோது, இது தொடர்பாகச் சிலர் தன்னிடம் முறையிட்டுள்ளனர் என்றும் தான் விசாரித்துப் பார்த்ததில் சர்ச் சைக்குள்ளாகியுள்ள குறிப்பிட்ட இவர் களுக்கு சிற்றூழியர்களுக்கான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் இவர்கள் அச்சிற்றூழியர் நியமனங்களை வைத்துக்கொண்டு லிகிதர்களாகவும், ஏனைய சில துறைகளில் அதிகாரிகளாகவும் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இராஜினாமாச் செய்த முன்னாள் மேயரின் காலத்தில் இது நடைபெற்றுள்ளதாக என்னிடம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித் தார்.
இதன் உண்மைநிலை தெரியாது. என்னால் இப்போது சரியாக எதுவும் கூற முடியாது. இது தொடர்பான உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நான் மாநகர உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்.கட்சி மட்டத்திலும் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடியும்வரை மேயராக நியமனம் பெறவுள்ள நிஸாம் காரியப்பரிடம் இது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுள்ளேன் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
நான் 24 ஆம் திகதி கல்முனை சென்று மக்களைச் சந்தித்து பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி புதிய மேயரிடம் உத்தியோகபூர்வமாக பணிகளைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்வேன்.
அதற்கிடையில் இத்தகைய சில பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
அதற்கிடையில் இத்தகைய சில பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
தினகரன்-

0 comments:
Post a Comment