யு.கே.காலித்தீன்;
கல்முனை மாநகர சபையின் 5வது முதல்வரான எம். நிஸாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் நேற்று இரவு 2013.11.24ம் திகதி கல்முகை நகர மண்டபத்திற்கு அருகில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் 5வது முதல்வரான எம். நிஸாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் நேற்று இரவு 2013.11.24ம் திகதி கல்முகை நகர மண்டபத்திற்கு அருகில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் எம் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேஸியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கிம் கலந்து கொண்டு முதல்வரும் சிரேஷ்ட சட்டத்திரணியுமான எம் நிஸாம் காரியப்பருக்கு சம்பிர்தாயபூர்வமாக முதல்வர் ஆடை கட்சியின் தலைவரினால் அணிவிக்கப்பட்டது.
அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் தலைவர். வைத்தியர் ஏ. அப்துல் அஸீஸ் மற்றும் ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment