அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஒரு பெண் வரக்கூடும் என்று, தற்போதைய அதிபர்
பராக் ஒபாமா அறிவித்துள்ளதால் அந்நாட்டு மக்களிடையே சுவாரஸ்ய விவாதங்கள்
ஏற்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா அமெரிக்க ஒளிபரப்பு கழகத்திற்கு பேட்டி
அளித்தார். பேட்டியின் போது பேசிய அவர் நாட்டிற்கு அடுத்த அதிபராக பெண்
ஒருவர் வரக்கூடும் என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் திறமையான பல பெண்
அரசியல் நிர்வாகிகள் இருப்பதாக தெரிவித்தார்.
இவர்களில் ஒருவர் விரைவில்
அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமருவார் என்று தெரிவித்தார். அமெரிக்காவில்
முதல் முறையாக தேர்ந்தெடுக்கபட உள்ள பெண் அதிபரால் மிகவும் சிறப்பாக
பணியாற்ற முடியும் என்றும் ஒபாமா கூறினார். ஒபாமா இவ்வாறு சூசகமாக
பேசியுள்ளது அந்நாட்டு மக்களிடையே சுவாரஸ்ய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஒபாமா குறிப்பிடும் பெண்மணி முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்
ஹலாரி கிளிண்டனைதான் குறிப்பிட்டாரா என்பதில் தெளிவில்லை. 2008ம் ஆண்டு
அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பாக நிற்பதில் ஒபாமாவிற்கும்,
ஹிலாரிக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் ஒபாமா குடியரசுக் கட்சி
வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபர் ஆனார்.
இந்நிலையில் வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட, குடியரசுக் கட்சி ஹிலாரிக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதகைனயடுத்தே ஒபாமா இவ்வாறு கூறியுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன

0 comments:
Post a Comment