இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்து வரும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இப்பிரச்சினை மிகவும் உக்கிரமடைந்துள்ள நிலையில், இருநாட்டு கடற்படையினரும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்து வருகின்றனர்.
அத்துடன், இருநாட்டுக்கும் இடையிலான கடற்பகுதியில், இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் முறுகல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
MT
0 comments:
Post a Comment